Thursday 13 June 2013

தேடலுடன் ....தேனீ...!!(7)

மண்ணுக்கும்-
மனிதனுக்கும்-
பூர்வ சொந்தம்!

மண்ணுக்காக-
கொட்டியது-
எவ்வளவு-
ரத்தம்!!?

மண்ணின்-
ஆசையால்-
மனிதனும்-
கெட்டழிஞ்சான்!

மண்ணையும்-
கெடுத்து-
அழிச்சான்!

நீர்-
நிலம்-
காற்று-
பொதுவாகவே-
இறைவன்-
படைத்தான்!

சிறு புத்தி கொண்ட-
 மனிதன்தான்-
அதனை-
பிரிச்சான்!

பலவிதமான-
வாதம்!

இனவாதம்!
மொழிவாதம்!
தேசியவாதம்!

யாதும் ஊரே-
யாவரும் கேளீர்-
முன்னோர் சொல்!

இன்றைக்கு-
நடப்பதோ-
நீ-
வாழ-
எத்தனை பேரையும்-
கொல்!

கேடுகெட்ட-
 மனித ஜென்மம்!

எப்போதுதான்-
திருந்தும்!?

மனிதனை-
மனிதன்-
அடிமைபடுத்தி!

மகிழ்கிறான்-
தன்னைதானே-
குஷி படுத்தி!

வர்ணங்கள்!
வர்க்கங்கள்!

இதன்மூலமும்-
பிளவுகள்!

ஊதியம்-
கொடுப்பவன்-
உயர்ந்தவனும் அல்ல!

வாங்குபவன்-
தாழ்ந்தவனும்-
அல்ல!

கிளைகள்-
இல்லைஎன்றால்-
வேர்கள் தெரிவதில்லை!

வேர்கள்-
இல்லைஎன்றால்-
கிளைகள் -
வளர-
வழியே இல்லை!

சுற்றி வந்தோம்-
கள்ளி காட்டிலே!

பயணிக்க -
இருக்கிறோம்-
வேறொரு-
கண்டத்திலே..!

(தொடரும்....)

7 comments:

  1. அருமைங்க..தொடர் போல இருக்கே..அனைத்தையும் படிக்கிறேன்..நன்றி

    ReplyDelete
  2. தொடராக அழகாக எழுதுறீங்க நண்பா....

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நடக்கும் உண்மைகள்-கொடுமைகள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சமூக அக்கறை உள்ள கவிதைகள் ... அருமை

    ReplyDelete
  5. இன்றைக்கு-
    நடப்பதோ-
    நீ-
    வாழ-
    எத்தனை பேரையும்-
    கொல்!

    >>
    இந்த வேதாந்தத்தாலதான் எல்லாமே!

    ReplyDelete
  6. அருமை! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  7. தொடர வாழ்த்துகள்.......

    ReplyDelete