Tuesday 18 June 2013

தேடலுடன்...தேனீ...!! (12)

பூவின்-
தொடக்கம்-
கிளையிலிருந்து!

கிளையின்-
தொடக்கம்-
தண்டிலிருந்து!

தண்டு-
வேரிலிருந்து!

வேர்-
விதையிலிருந்து!

இப்படியே-
தொடரும்-
கேள்வியிலிருந்து!

எப்படி-
மீள-
இச்சிந்தனையிலிருந்து!

ஆனால்-
ஒன்று!

"ஒன்றிலிருந்தே"-
வந்துள்ளது-
மற்றொன்று!

அந்த-
"ஒன்று"!

எந்த-
ஒன்று!

அதில்தான்-
விவகாரம்-
உலகில் -
இன்று!

அலெக்ஸ் ஹெலியை-
"வேர்களை"-
எழுத வைத்தது!-
எது!?

அம்முயற்சி -
தீயில் -
தள்ளியது-
எது!?

அதற்கு-
மேலும்-
"ஒன்றை"-
அறியவேண்டியுள்ளது!

யார் அது!?

சரித்திரத்தை-
சொன்னவர்!

சரித்திரமாகவே-
"சரிந்தவர்!"

எனக்கு-
பிடித்த-
வீரர்களில்-
ஒருவர்!

யார்-
அவர்!?

(தொடரும்...!)






3 comments:

  1. யார் அவர்
    அறிய ஆவல்
    சிந்தனை வேகம் கண்டு
    பிரமிக்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சொன்னவிதம் அருமை...

    ஆவலுடன்...

    ReplyDelete
  3. சஸ்பென்ஸை கிளப்பிவிட்டீர்கள்! காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete