Monday 24 June 2013

தேடலுடன்...தேனீ..!! (18)

இருந்தார்-
மால்கம் x -
மனச்சோர்வாக!

முயற்சித்தார்-
மன அமைதிக்காக!

"வெளியேறியதால்"-
சில சலம்பல்கள்!

சில எதிர்ப்புகள்!
சில அங்கலாய்ப்புகள்!

ஆயத்தமானார்-
புனித யாத்திரைக்கு!(ஹஜ்)

யாத்திரை-
வழி வகுத்தது-
இவரின் -
இன்னொரு பயணத்திற்கு!

போன இடத்தில-
அறிந்தவர்கள்-
சிறப்பு வரவேற்புகள்!

உச்சி முகர்ந்து-
உபசரிப்புகள்!

மால்கம் x -
அதிசயித்தார்!
பிரமித்தார்!

ஏனென்றால்!

சமத்துவமாக-
நடந்துகொண்டவர்கள்!

வெள்ளையாக-
இருந்ததால்!

"இவர்கள்"-
அமெரிக்காவில்-
பிறந்திருந்தால்!

இவர்களும்-
வெள்ளையர்கள்தான்!

வேறு தேசத்தில்-
பிறந்ததால்!

அத்தேச-
 பேரால்-
அழைக்கபட்டார்கள்!

இம்மக்களுக்கு-
இங்கிதத்துடன்-
நடக்க காரணம்-
எது!?

மால்கம் எக்சின்-
உள்ளத்தில்-
கேள்வி எழுந்தது!

பதிலும்-
கிடைத்தது!

இஸ்லாம்தான்-
அது!

கறுப்பின-
மக்களிடம்-
மட்டும் -
"சொன்னது"-
தப்பானது!

பிற மக்களிடமும்-
சொல்வதே-
நியாயமானது!

மனம்-
உறுதி பூண்டது!

புனித யாத்திரையில்-
வெள்ளை உடை-
அணிந்த -
மக்கள்!

வெவ்வேறு-
மொழிகள்!

வெவ்வேறு-
நிறங்கள்!

வெவ்வேறு-
அந்தஸ்துடையவர்கள்!

உலகிலுள்ள-
அத்தனை -
பகுதியில் இருந்து-
வந்தவர்கள்!

ஒரே-
இறைவனை புகழும்-
முழக்கங்கள்!

மால்கம் x -
புல்லரித்துபோனார்!

யாத்திரை-
இனிதே -
முடிந்தது!

மால்கம் x வந்த-
 விமானம்-
தரை இறங்கியது!

அவரிடம்-
புது வேகம்-
இருந்தது!

பெரும் ஆபத்தும்-
காத்திருந்தது!

தண்ணீரை-
அணை தடுக்கிறது!

தண்ணீர் என்ன!?-
அடங்கியா கிடக்கிறது..!!?

(தொடரும்....)




7 comments:

  1. தண்ணீரை-
    அணை தடுக்கிறது!

    தண்ணீர் என்ன!?-
    அடங்கியா கிடக்கிறது..!!?//

    அருமையான வரிகள் மிகவும் ரசித்தேன்...!

    ReplyDelete
  2. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. அப்போ அப்போ வந்து எட்டிபார்த்து செல்கிறேன் நண்பா

    ReplyDelete
  4. அருமை! தொடர்கிறேன்! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அறிகின்றேன் தொடர்கின்றேன்...

    வலைசர அறிமுகத்தில் இன்று நீங்களும்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தண்ணீர் அடங்கியா கிடக்கின்றது?? // அருமையான சிலிர்க்கும் வரிகள் சகோ தொடருங்கள் தொடர்கின்றேன்!

    ReplyDelete
  7. தொடருங்கள் தொட்ர்கிறேன்.

    ReplyDelete