Wednesday 1 February 2012

வஞ்சியும்- வண்ணத்து பூச்சியும்!

செத்து விடும்-
இறுக்கி பிடிக்கும்போது!

பறந்து விடும்-
இலகுவா பிடிக்கும்போது!

நெருங்குவாள் -
ஒதுங்கும்போது!

ஒதுங்குவாள்-
நெருங்கும்போது!

பறந்து விடும்-
பிடிக்க முயலும்போது!

விளையாட்டு காட்டி-
பூவில் உக்காரும்-
நான் அயர்ந்து உட்காரும்போது!

ஒளிந்திடுவாள்-
தேடும்போது!

தேடிடுவாள்-
நான் "தெருவுக்கு"-
போகாமல் இருக்கும்போது!

அழகாக இருக்கும்-
பூவில் ஒட்டி இருக்கும்போது!

அனவாசியமாக தோன்றும்-
பாறைகளில் ஒட்டி இருக்கும்போது!

ஆயிரம் அர்த்தம் தந்தது-
அருகில் அவள் இருந்தபோது !

அர்த்தமற்றதாக மாறியது-
அவளை விட்டு பிரிந்த போது!

வண்ணங்களை விட்டு செல்லும் -
"பிடித்து " -விடும்போது!

"காயங்களை" தந்து செல்லுவாள்-
பிடித்தமானவள் - பிரியும்போது!

7 comments:

  1. வித்தியாசங்கள் சொல்லிப் போனவிதம் அருமை
    வித்தியாசமான சிந்தனை
    எளிய சொற்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Replies
    1. Ayyaa nantrikal ayyaa!

      ethai neengal remove panna sollreenga!

      Delete
  3. சீனி...ஏதோ ஒரு வகையில் இருவரும் நினைவுகளைத் தந்துதானே போயிருக்கிறார்கள்.தனித்தில்லை நீங்கள் !

    பின்னூட்டம் போடத்தொடங்கும்போது வரும் ஆங்கில (word verification) எழுத்துக்களுக்கான இடத்தை நீக்கிவிடுங்கள்.பின்னூட்டம் தர இலகுவாக இருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. Nantri hema avarkale!

      thaangal ezhuthiya pinnoottathirkku-
      nantrikal pala!

      enakku kanini araikuraivaakave
      theriyum!
      ungal aalosanai-
      ramani ayyaa aalosanai
      etru kolkiren!

      nanparkalidam kettu therinthu kolkiren!
      ennai naan maatri kolkiren!

      Delete
  4. ada ada adaaaaaaaaa...enna oru thalaippu...
    really super thalaippu seeni

    ReplyDelete
    Replies
    1. kalai!
      ungaludaya karuthukkal-
      ennai theettum -
      mikka nantri!
      karuthuraiththathukku!

      Delete