Tuesday 27 March 2012

சிலை!

பெண்ணே -
உன்னை -
செதுக்க மாட்டேன்-
சிலையாக!

வழி வகுக்க மாட்டேன்-
பறவைகளுக்கு-
கழிவறையாக!
---------------------
நிக்குது-
தலைவர்கள்-
சிலைகள்!

காணாமல்-
போய் விட்டது-
கொள்கைகள்!
--------------------
வருடந்தோறும்-
"ஜெயந்தீ"!

மூட்ட உதவுது-
கலவர" தீ!"

பொது மக்களுக்கோ-
பீதி!
---------------------
பிணை தேவை பட்டது-
சிறையில் கிடந்த-
தலைவர்களுக்கு!

கம்பி கூண்டில்-
சிலைகள்-எங்கே போக
பிணைக்கு!?
---------------------
கம்போட நிக்குது-
காந்தி சிலை!

எதிரே திறந்து-
இருக்கு-
டாஸ்மாக் கடை!

அவர் சொன்னது-
மது விலக்கு!

"அறிவிப்பு"-
அதிக நேரம்-
பண்டிகை தினத்துக்கு!
-----------------------
அன்று-
தன்னலமற்ற-
போராட்டம்!

இன்று-
தன் இருப்பை-
அடையாள படுத்த-
போராட்டம்!
---------------------
கொண்டு போவார்கள்-
தண்ணிய போட்டு!

போட்டு மிதிப்பார்கள்-
தண்ணியில போட்டு!
-------------------------
யார் -
சாபமோ!,

நடு ரோட்டில்-
நிக்கும் நிலையோ!!
------------------------
பசியில-
மழலை!

பாலில்-
குளியல்-
சிலை!
-----------------
உயிருக்கே-
உறுதி இல்லாத-
நிலை இப்போது!

கொடுமை-
சிலைகளுக்கு-
பாதுகாப்பை-
பலபடுத்துவது!
----------------------

9 comments:

  1. சிலைகளும் அழும் உள்ளுக்குள்.அதன் நிலையை கலையாய் வடித்த உங்கள் எண்ணங்களுக்கு எல்லையே இல்லை.அலைபோல அத்தனை எண்ணங்களும் அருமை !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. //அவர் சொன்னது-
    மது விலக்கு!

    "அறிவிப்பு"-
    அதிக நேரம்-
    பண்டிகை தினத்துக்கு!//

    ;)

    ReplyDelete
    Replies
    1. gopala krishnan ayya!

      neenga vanthathukku-
      mikka nantri!

      enna solla vantheenga -
      enakku theriyala!

      Delete
  3. நிக்குது-
    தலைவர்கள்-
    சிலைகள்!

    காணாமல்-
    போய் விட்டது-
    கொள்கைகள்!//
    நிஜம் சொல்லும் வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. sasikali;

      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
    2. sasikali;

      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  4. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. chennai piththan ayya!

    ungal muthal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete