Wednesday 20 November 2013

"காட்சிகள் ". (சிறு கதை)

             காட்சி -1
              -------------
               பச்சை பசேலென இருக்கும் மலைகளுக்குள் சல சலவென ஓடும் அருவியொன்று.அதனை சுற்றி சப்தமிடும்  பறவைகள் கூட்டம் சிறகடித்து பறக்கும் சப்தம்.இயற்கை அழகு கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது.

                அழகு தேவதை பெண்ணொருத்தி அருவியை நோக்கி  வருகிறாள். வந்தவள் தலையில் கட்டியிருந்த துவாலையை தூக்கி எறிந்தாள். அதனை தொடர்ந்து தனது மேலங்கியை அவிழ்க்கிறாள் . மேலும் மார்பிலிருந்து முழங்கால்வரை மறைத்திருந்த துண்டையும் துச்சமென களைகிறாள்.இரண்டு கையளவு துணிகளை ஆடையென அணிந்திருந்தாள்.

              ஒரே குதி அருவினுள் நீந்துகிறாள் சிரிக்கிறாள் சோப்பு தேய்க்கிறாள் தேய்த்துகொண்டே இருக்கிறாள் .அழுக்கில்லாத உடம்பில் அலுக்காமல் சோப்பு தேய்க்கிறாள்.

         பிறகு செல்லகொஞ்சலுடன் சொல்கிறாள் ."என் மேனியின் அழகிற்கு இந்த "டாப்ஸ்"சோப்பே காரணம்....!! என்கிறாள்.

            காட்சி-2
            ---------------
          
                    மழை பெய்ந்து ஓய்ந்திருந்தது.சாலையின் குழிகளிருந்த தண்ணீரை வைத்து அறியமுடிந்தது.அந்த ஈரசாலையில் 
வருகிறாள் சுடுதார் அணிந்து ஒரு பூஞ்சோலை. 

                அவளிடம் ஒரு இளைஞன் தன்காதலை ஒரு பூவின் மூலம் தெரியபடுத்துகிறான்.அவள் மறுக்கிறாள்.கடிதம் கொடுக்கிறான் அதில் என் உயிரே உனக்கென வாசகம் கொண்ட கடிதம் அது.அப்போதும் மறுக்கிறாள்.இன்னொரு நாள் ஒரு பைக்கில் வந்து பார்க்கவே செய்கிறான்.அவள் விறு விறுவென பைக்கில் ஏறிக்கொள்கிறாள்.

              பைக் பறக்கிறது.உங்களுடன் என்றும் "காசாகூ"பைக் இருக்கவேண்டும் என சொல்லபடுகிறது.

                காட்சி-3
                 -----------
           விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சி "பெண்களின் கண்ணியம் காக்கபடனும்".இதனை உங்களுக்கு வழங்குவது."காசாகூ"நிறுவனத்தாரும் "டாப்ஸ்"நிறுவனத்தாரும்.சொல்லி ஒளிபரப்புகிறது தொலைக்காட்சி....

       தலையில் மண்ணள்ளி போட்டுவிட்டு குளிக்க தண்ணீர் கொடுப்பது போலாகவே உள்ளது.இது போன்ற காட்சிகள்...

4 comments:

  1. விளம்பர யுத்தி....!
    வித்தியாசமாக யோசித்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்

    நல்ல விளம்பரமுங்கோ
    நான் நம்பல்ல

    ReplyDelete
  3. எல்லாம் விளம்பரமா தானே போயிடுச்சு சகோதரரே! வித்தியாசமான சிந்தனை. கண்கள் பிடிங்கிக் கொண்டு ஓவியம் காட்டுவது தான் இன்றைய விளம்பர உத்தியாகப் போய்விட்டது! பகிர்வுக்கு நன்றி சகோதரர்..

    ReplyDelete
  4. அட இப்போதெல்லாம் பல விளம்பரங்கள் பார்க்கவே முடியவில்லை......

    ReplyDelete